ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்


ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்
x
தினத்தந்தி 19 Aug 2019 1:59 PM GMT (Updated: 19 Aug 2019 1:59 PM GMT)

சீனாவில் ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் குத்திக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது. ஹெனான் மாகாணத்தின் ஜூமாடியன் நகரில் கடை வீதியில் காதல் ஜோடி நடந்து சென்றபோது, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஐஸ்கிரீம் வாங்கி உண்ண வேண்டும் என காதலி கேட்டுள்ளார். ஆனால் காதலரோ ‘‘நீ ஏற்கனவே உடல் பருமனாக இருக்கிறாய். இன்னும் ஐஸ்கிரீம் வாங்கி உண்ண விரும்புகிறாயா?’’ என வாங்கி கொடுக்க மறுத்துள்ளார். ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததோடு தனது உடல் எடை குறித்து கேலி செய்ததால் காதலி ஆத்திரம் அடைந்தார். எனினும் அவர் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடந்து சென்றுள்ளார்.

பின்னர் காதலரை ஒரு இடத்தில் நிற்கவைத்துவிட்டு அங்குள்ள கடைக்குச்சென்று 2 கத்தரிக்கோல்களை வாங்கி வந்துள்ளார். காதலர் எதற்கு இது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது காதலி அவரது வயிற்றில் சதக் சதக் என 4 முறை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையில் காதலரை குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற காதலியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கொலை செய்ததை நினைத்து காதலில் கதறி அழுதுள்ளார். 


Next Story