ரோஹிங்கியா இனப்படுகொலையை நினைவு கூரும் வகையில் 200,000 பேர் பேரணி


ரோஹிங்கியா இனப்படுகொலையை நினைவு கூரும் வகையில் 200,000 பேர் பேரணி
x
தினத்தந்தி 26 Aug 2019 9:45 AM GMT (Updated: 26 Aug 2019 9:45 AM GMT)

வங்காள தேசத்தில், ரோஹிங்கியா இனப்படுகொலையை குறிக்கும் வகையில் சுமார் 200,000 பேர் மாபெரும் பேரணி நடத்தினர்.

டாக்கா,

மியான்மரில் வசித்து வரும் சிறுபான்மை முஸ்லிம்களான ரோஹிங்கியாக்களுக்கு எதிராக ராணுவமும், பிற பிரிவினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதால், ஆயிரக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்நிலையில், அவர்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறியதை நினைவு கூரும் வகையில், தாய்நாட்டுக்கு மீண்டும் அந்நாட்டு அரசு அழைத்துக் கொள்ளாததையும் கண்டித்து வங்கதேசத்தில் உள்ள முகாம்களில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 200,000 பேர் பேரணியில் ஈடுபட்டனர்.  ரோஹிங்கியாக்களின் துயரங்களை இந்த உலகம் கேட்க மறுக்கிறது என்று கூறியபடி சென்றனர்.

 சிறுபான்மையினரான நாங்கள் தாய்நாடு திரும்பத் தயாராக உள்ளதாகவும், ஆனால் அரசு, பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றும் ரோஹிங்கியா தலைவர் மொஹிப் உல்லா தெரிவித்தார்.

Next Story