உலக செய்திகள்

சீனாவில் வாலிபரின் காதுக்குள் 11 கரப்பான் பூச்சிகள் + "||" + 11 cockroaches in the ear of a young man in China

சீனாவில் வாலிபரின் காதுக்குள் 11 கரப்பான் பூச்சிகள்

சீனாவில் வாலிபரின் காதுக்குள் 11 கரப்பான் பூச்சிகள்
சீனாவில் வாலிபரின் காதுக்குள் 11 கரப்பான் பூச்சிகள் இருந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீஜிங்,

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஹுய்சோ மாவட்டத்தில் வசித்து வருபவர் எல்வி (வயது 24). இவர் திடீரென்று காது வலியின் காரணமாக தூக்கத்தில் இருந்து எழுந்தார்.

காதுக்குள் ஏதோ ஊர்ந்து செல்வது போல் இருப்பதாகவும், கடுமையான அரிப்பை உணர்வதாகவும் வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். இதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வலது புற காதுக்குள் ஒரு பெரிய கரப்பான் பூச்சியும் அதனுடைய 10 குட்டிகளும் ஓடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதையடுத்து, நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு அவரது காதில் இருந்து 11 கரப்பான் பூச்சிகளையும் மருத்துவர்கள் அகற்றினர். எல்வியின் காதுக்குள் கரப்பான் பூச்சிகள் எப்படி சென்றன என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் மனித முகம் கொண்ட அதிசய மீன் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ
சீனாவில் மனித முகம் கொண்ட அதிசய மீனின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
2. சீனாவில் வைர கற்கள் பதித்த தங்க கழிவறை கோப்பை
சீனாவில் சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் வைர கற்கள் பதித்த தங்க கழிவறை கோப்பை காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.
3. சீனாவில் கவனம் ஈர்க்கும் ‘பாண்டா’ நாய்குட்டிகள்
சீனாவில் வளர்ப்பு பிராணிகள் நிலையத்தில் ‘பாண்டா’ நாய்குட்டிகள் பவரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
4. சீனாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
சீனாவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. சீனாவில் பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பலி
சீனாவில் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து வாகனங்கள் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.