பிலிப்பைன்சில் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.8 ஆக பதிவு


பிலிப்பைன்சில் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.8 ஆக பதிவு
x
தினத்தந்தி 15 Dec 2019 7:37 AM GMT (Updated: 15 Dec 2019 7:37 AM GMT)

பிலிப்பைன்சில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

மின்டானாவ்,

பிலிப்பைன்ஸ் தீவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மின்டானாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கம் மக்கள் தொகை அதிகம் கொண்ட தவாவ் நகருக்கு தெற்கே மையம் கொண்டிருந்தது.  எனினும் குறைவான அளவிலேயே சேதம் ஏற்பட்டிருக்க கூடும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.  தொடக்கத்தில் 6.9 ஆக நிலநடுக்கம் பதிவானது என தெரிவிக்கப்பட்டது.

Next Story