இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு டிரம்ப் வாழ்த்து


இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு டிரம்ப் வாழ்த்து
x
தினத்தந்தி 17 Dec 2019 10:52 PM GMT (Updated: 17 Dec 2019 10:52 PM GMT)

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

* வடகொரியாவின் கடல்சார் உணவுகள் மற்றும் ஜவுளிகள் மீதான ஏற்றுமதி தடையை நீக்க வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீனாவும், ரஷியாவும் இணைந்து தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம் வெற்றி பெற 9 வாக்குகள் தேவைப்படுகின்றன. எனினும் இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு எப்போது நடக்கும் என்பதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவிக்கவில்லை.

* இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் போரிஸ் ஜான்சனின் பழமைவாத கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு டிரம்ப் தனது வாழ்த்துகளை கூறினார். மேலும் இருநாடுகளின் உறவை பலப்படுத்துவது குறித்து இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினர்.

* வடகொரியாவின் நடவடிக்கைகளை தான் தொடர்ந்து நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், அந்த நாடு மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கி, எதிர்மறையான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நிச்சயம் ஏமாற்றம் அடைவேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே சமயம் ஒரு வேளை வடகொரியா அவ்வாறு நடந்து கொண்டால் அமெரிக்கா அதனை கவனித்து கொள்ளும் எனவும் அவர் கூறினார்.

* தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வீரர்கள் 4 ஆயிரம் பேரை திரும்பப்பெறுவதற்கான அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தலீபான்களுடன் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என அமெரிக்க ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.


Next Story