ரஷியாவில் வெந்நீர் குழாய் வெடித்து 5 பேர் பலி


ரஷியாவில் வெந்நீர் குழாய் வெடித்து 5 பேர் பலி
x
தினத்தந்தி 20 Jan 2020 4:56 PM GMT (Updated: 20 Jan 2020 4:56 PM GMT)

ரஷியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வெந்நீர் குழாய் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாஸ்கோ,

ரஷியாவில் தற்போது கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் வீடுகள், ஹோட்டல்கள் என அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் பயன்பாட்டிற்காக குழாய் மூலம் வெந்நீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் பேர்ம் என்ற பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள வெந்நீர் குழாயில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஹோட்டலின் தரைத்தளத்தில் சூடான நீர் பெருக்கெடுத்து ஓடத் துவங்கியது.

அந்த நேரத்தில் அங்கு தங்கியிருந்தவர்களில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அந்த மாகாணத்தின் கவர்னர் மேக்சிம் ரெஷெட்னிகோவ் கூறிய போது, இது ஒரு மோசமான விபத்து என்று குறிப்பிட்டார். 

இந்த சம்வத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தங்கள் மீது ஏற்பட்ட காயங்களையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்தவர்களை  காப்பாற்றியதாகவும், அவர்களுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story