இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவு


இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவு
x
தினத்தந்தி 26 Feb 2020 10:16 PM GMT (Updated: 26 Feb 2020 10:16 PM GMT)

இந்தோனேசியாவின் மலுகு தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது.


* அமெரிக்காவில் இ-சிகரெட் புகைப்பதால் ஏற்படும் நோய் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் அங்கு இ-சிகரெட் தொடர்பான நோயிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தோனேசியாவின் மலுகு தீவில் உள்ள துவால் நகரை மையமாக கொண்டு நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* மலேசியாவில் ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகாதீர் முகமது, நாட்டில் ஒற்றுமையான அரசாங்கம் உருவாக வேண்டும் என்றும், பிரதமர் பதவிக்கு திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

* ஜப்பானில் கொரோனா தாக்குதல் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பின்னர் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்ட ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பல் பயணிகள் 45 பேருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story