கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியை பரிசோதிக்க சீன அரசு அனுமதி


கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியை பரிசோதிக்க சீன அரசு அனுமதி
x
தினத்தந்தி 18 March 2020 7:54 AM GMT (Updated: 18 March 2020 7:54 AM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதித்து பார்க்க சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பெய்ஜிங், 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக களம் இறங்கியுள்ளது. தடுப்பு மருந்துகளை மனிதர்களிடம் பரிசோதிக்கும் பணியையும் நேற்று முன் தினம் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர். 

ஆரோக்கியமான உடல் நலம் கொண்ட 45 பேரிடம் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதித்து பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில், கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவும் , கொரோனா வைரஸ் தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்க சீனா அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story