இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,463 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,463 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 26 April 2020 4:57 PM GMT (Updated: 26 April 2020 4:57 PM GMT)

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,463 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போது இங்கிலாந்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இங்கிலாந்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் கடந்துள்ளது. உலகில் அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இங்கிலாந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் இங்கி்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,463 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,52,840 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 24 மணி நேரத்தில் 413 பேர் பலியாகி உள்ளனர். இதனால் வைரஸ் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 20,732 ஆக உயர்ந்துள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story