ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கூடிய புதிய நாடாளுமன்றம்


ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கூடிய புதிய நாடாளுமன்றம்
x
தினத்தந்தி 27 May 2020 10:15 PM GMT (Updated: 27 May 2020 8:52 PM GMT)

ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் புதிய நாடாளுமன்றம் நேற்று கூடியது.

* அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரத்தில் போலீஸ் காவலில் கருப்பர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். இது குறித்து அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ.யும், மாகாண போலீசும் விசாரணை நடத்துகிறது. இந்த நிலையில் அவரை கைது செய்த மினியாபோலிஸ் நகர போலீஸ் அதிகாரிகள் 4 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

* ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றிய 5 இந்திய வீரர்கள் மரணத்துக்கு பிந்தைய நிலையில், அவர்களது உயிர் தியாகத்துக்காக ஐ.நா. பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மேஜர் ரவிந்தர் சிங் சந்து, சார்ஜண்ட் லால்மனோத்ரா தார்செம், சார்ஜண்ட் ரமேஷ் சிங், ஜான்சன் பெக், எட்வர்டு அகபிடோ பின்டோ ஆவார்கள்.

* பாகிஸ்தானில் கராச்சி நகரில் தரை இறங்க இருந்த நிலையில் பயணிகள் விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து சமீபத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 97 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து ஏர்பஸ் விமான நிறுவனத்தின் 11 உறுப்பினர்களை கொண்ட தொழில்நுட்ப குழு விசாரணை நடத்துகிறது. இந்த குழு நேற்று கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையம், ஓடுதளம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், ரேடார் கட்டுப்பாட்டு நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தது.

* ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் புதிய நாடாளுமன்றம் நேற்று கூடியது. முன்னதாக 268 உறுப்பினர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. முதல்நாளில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Next Story