பாகிஸ்தான் - கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,74,289 ஆக உயர்வு


பாகிஸ்தான் - கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,74,289 ஆக உயர்வு
x
தினத்தந்தி 27 July 2020 11:30 AM GMT (Updated: 27 July 2020 11:30 AM GMT)

பாகிஸ்தானில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,74,289- ஆக உயர்ந்துள்ளது.

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானில் புதிதாக 1,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 2,74,289 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,74,289 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,842 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 2,41,026 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 1,229 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 22,056 உள்பட இதுவரை 18,90,236 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை பாகிஸ்தான் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

Next Story