பாகிஸ்தானைப் போல் இரும்பு சகோதரராக ஆப்கானிஸ்தான்,நேபாளம் இருக்க வேண்டும் -சீனா வேண்டுகோள்


பாகிஸ்தானைப் போல் இரும்பு சகோதரராக ஆப்கானிஸ்தான்,நேபாளம் இருக்க வேண்டும் -சீனா வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 July 2020 3:29 AM GMT (Updated: 28 July 2020 3:29 AM GMT)

நேபாளம், பாகிஸ்தான் , ஆபகானிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் சந்திப்பில் இரும்பு சகோதரர்' போல இருக்குமாறு சீனா நேபாளம்,ஆப்கானிஸ்தானைக் கேட்டு கொண்டுள்ளது.

பீஜிங்

இந்தியா, ஜப்பான் மற்றும் சுற்றியுள்ள பிற நாடுகள் சீனாவின் ஆதிக்க நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தென் சீனக் கடலில் வர்த்தகம், கொரோனா வைரஸ் மற்றும் லடாக் மோதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமெரிக்கா சீனாவை விமர்சித்து வருகிறது. கடந்த வாரம், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ சீனாவுக்கு எதிராக நிற்க வேண்டும் பல நாடுகளுக்கு  அழைப்பு விடுத்தார்.

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா ஒரு கூட்டணியை உருவாக்கி வரும் நிலையில் சீனா தனது ஆதரவாக தனது பிராந்தியத்தில் உள்ள நாடுகளை குறிவைத்து உள்ளது. ஏற்கனவே சீனாவின் சொற்படி ஆடும் நேபாளம் இந்துயாவுக்கு எதிராக திரும்பி உள்ளது.

அடுத்து பாகிஸ்தானை தூண்டில் புழுவாக பயன்படுத்தி  ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தை வளைக்க சீனா வலைவரித்து உள்ளது.

முதல் கட்டமாக கடந்தவாரம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாங்காள தேச பிரதமர்  யில்ஷேக் ஹசீனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து பேசபட்டதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக நேபாளம், பாகிஸ்தான் , ஆபகானிஸ்தான்  நான்கு நாடுகள்  சந்திப்பு ஒன்றை சீனா நடத்தி  சீனாவுக்கு பாகிஸ்தானைப்போல் 'இரும்பு சகோதரராக இருக்குமாறு  நேபாளம்,ஆப்கானிஸ்தானைக் கேட்டு கொண்டுள்ளது.

சீன மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யி சீனா, நேபாளம், பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை காணொலி மூலம் நடத்தினார்.

நான்கு நாட்டு அமைச்சர்களும் கொரோனா தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் அண்டை நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்தல்' குறித்து விவாதித்தனர்.

இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தானின் செயல் வெளியுறவு மந்திரி முகமது ஹனீப் அட்மார், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி, பொருளாதார விவகார அமைச்சர் குஸ்ரோ பக்தியார் மற்றும் நேபாள வெளியுறவு மந்திரி பிரதீப் குமார் கியாவாலி ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் ஆப்கானிஸ்தானையும்,நேபாளத்தையும் 'இரும்பு சகோதரர்' பாகிஸ்தானைப் போல இருக்குமாறு சீனா செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டதுடன், கொரோனா வைரஸின் சவாலை சமாளிக்க நான்கு நாடுகள் தரப்பு ஒத்துழைப்பை உருவாக்க வலியுறுத்தி உள்ளார்

தகவல்களின்படி, சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 'இரும்பு சகோதரர்' உறவுகளை மேற்கோள் காட்டிய வாங், 'வர்த்தக மற்றும் போக்குவரத்து தாழ்வாரங்களின்  செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தி உள்ளார்.

Next Story