நியூசிலாந்து நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு


நியூசிலாந்து நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு
x
தினத்தந்தி 24 Jan 2021 9:58 AM GMT (Updated: 24 Jan 2021 9:58 AM GMT)

நியூசிலாந்து நாட்டில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

வெல்லிங்கடன்,

நியூசிலாந்து நாடு பல தீவு கூட்டங்களை உள்ளடக்கியுள்ளது.  இவற்றில் ஆக்லாந்து தீவு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது.  முதற்கட்ட தகவலின்படி, நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என தெரிய வந்துள்ளது.  எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் உடனடியாக வெளிவரவில்லை.

Next Story