சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்காததால் சமூகவலைதளங்கள் மீது ரஷியாவில் வழக்கு


சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்காததால் சமூகவலைதளங்கள் மீது ரஷியாவில் வழக்கு
x
தினத்தந்தி 29 Jun 2021 12:26 AM GMT (Updated: 29 Jun 2021 12:26 AM GMT)

சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்காததால் கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட முக்கிய சமூகவலைதள நிறுவனம் மீது ரஷியாவில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.

மாஸ்கோ,

கூகுள், பேஸ்புக், டெலிகிராம், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களுக்கு ரஷியாவில் கடந்த சில நாட்களாக கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. ரஷியாவின் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீட்டை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சமூகவலைதளங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுதல், சேவை வேகம் குறைக்கப்படுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை ரஷியா மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்காததால் சமூகவலைதளங்கள் மீது ரஷிய கோர்ட்டில் 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு நிரூபிக்கப்பட்டால் அந்நிறுவனம் இந்திய மதிப்பில் 1 கோடியே 23 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்.

அதேபோல், டெலிகிராம் நிறுவனம் மீது 3 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அந்நிறுவனம் இந்திய மதிப்பில் 1 கோடியே 64 லட்ச ரூபாய் அபராதம் சந்திக்க நேரிடும்.

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனம் மீது தலா 2 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அந்நிறுவனங்கள் தலா 82 லட்ச ரூபாய் அபராதமும், சேவை வேகம் குறைப்பையும் சந்திக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story