“பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் உலகளாவிய ஆபத்து”; ஐ.நா.வில் இந்தியா கருத்து


“பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் உலகளாவிய ஆபத்து”; ஐ.நா.வில் இந்தியா கருத்து
x
தினத்தந்தி 29 Jun 2021 6:10 PM GMT (Updated: 29 Jun 2021 6:10 PM GMT)

ஜம்மு - காஷ்மீர் விமான நிலையத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலமாக இரட்டை வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில், விமானப்படை வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஐ.நா. பொதுக்குழுவில் உலகளாவிய பயங்கரவாதம் குறித்த விவாதத்தின்போது, ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளம் மீதான தாக்குதல் குறித்து பிரச்சினை எழுப்பிய இந்தியா, பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் உலகளாவிய ஆபத்து என கருத்து தெரிவித்தது. மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆயுதம் ஏந்திய டிரோன்களை பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து சர்வதேச சமூகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியது.

இதுகுறித்து இந்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் வி.எஸ்‌.கே.கவுமுடி கூறுகையில் , “குறைந்த விலை மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய டிரோன்களை பயங்கரவாத குழுக்கள் மோசமான நோக்கங்களுக்காக பயன்படுத்துவது உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உடனடி ஆபத்து மற்றும் சவாலாக மாறியுள்ளது. மூலோபாய மற்றும் வணிக சொத்துக்களுக்கு எதிராக பயங்கரவாத குழுக்கள் டிரோன்களை பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகளில் சர்வதேச சமூகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும்" என கூறினார்.

Next Story