உலக செய்திகள்

ரஷ்யாவில் புதிதாக 33,558 பேருக்கு கொரோனா: மேலும் 1,240 பேர் பலி + "||" + Russia records 33,558 new daily COVID-19 cases

ரஷ்யாவில் புதிதாக 33,558 பேருக்கு கொரோனா: மேலும் 1,240 பேர் பலி

ரஷ்யாவில் புதிதாக 33,558 பேருக்கு கொரோனா: மேலும் 1,240 பேர் பலி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,558 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 25.93 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 51.87 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 94,34,393 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 1,240 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 819 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 81,26,376 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 10,40,198 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய கொரோனா- உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?
‘நியோகோவ்’’ என்ற பெயரிலான உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
3. ஒமைக்ரான் பரவலால் அதிக உயிரிழப்பை சந்திக்கும் அமெரிக்கா!
வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் 8,78,000-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
4. பிரேசிலில் புதிதாக 2 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு கொரோனா
பிரேசிலில் ஒரே நாளில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 954 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
5. அசாமில் புதிதாக 2,861 பேருக்கு கொரோனா; 6,002 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 32,013 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.