ஒமிக்ரான் பாதிப்பு; தென்ஆப்பிரிக்காவில் இருந்து பயணிகள் வர நேபாளம் தடை


ஒமிக்ரான் பாதிப்பு; தென்ஆப்பிரிக்காவில் இருந்து பயணிகள் வர நேபாளம் தடை
x
தினத்தந்தி 28 Nov 2021 6:58 PM GMT (Updated: 28 Nov 2021 6:58 PM GMT)

ஒமிக்ரான் பாதிப்புகளை முன்னிட்டு தென்ஆப்பிரிக்காவில் இருந்து பயணிகள் வருவதற்கு நேபாளம் தடை விதித்து உள்ளது.


காத்மண்டு,

கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்த வடிவங்களை கொண்டு பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது பரவ தொடங்கியுள்ளது.  ஜெர்மனியிலும் முதன்முறையாக இதன் பாதிப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன.

அந்நாட்டின் முனிச் நகரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவருக்கு இதன் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இங்கிலாந்து நாட்டிலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், ஒமிக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தினால் தென்ஆப்பிரிக்காவில் இருந்து பயணிகள் வருவதற்கு நேபாளம் தடை விதித்து உள்ளது.  அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story