சீனாவில் கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலி..!


சீனாவில் கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலி..!
x
தினத்தந்தி 2 Jan 2022 10:00 AM GMT (Updated: 2 Jan 2022 10:00 AM GMT)

வடகிழக்கு சீனாவில் மார்க்கெட் கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

தாலியன்,

வடகிழக்கு சீனாவில் தாலியன் நகரில் நேற்று முன்தினம் ஒரு மார்க்கெட் கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று முன்தினம் சீன நேரப்படி காலை 11 மணியளவில் கட்டிடத்தின் அடிப்பகுதியில் தீ பரவத் தொடங்கியுள்ளது. சுமார் மதியம் 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய தீயணைப்பு வீரர் ஒருவர், இந்த தீ விபத்தில் 9 பேர் இறந்துள்ளனர். அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 5 பேர் சிறுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 தீவிர கண்காணிப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று கூறினார்.

கட்டிடத்தின் அடிப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story