ஜெர்மனியில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா


ஜெர்மனியில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Jan 2022 8:01 PM GMT (Updated: 27 Jan 2022 8:01 PM GMT)

ஜெர்மனியில் ஒரே நாளில் 2,03,136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பெர்லின்,

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போல பரவி வருகிறது. நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் அங்கு 2 லட்சத்து 3 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் ஒரே நாளில் 188 பேர் கொரோனாவில் இருந்து மீள முடியாமல் மரணம் அடைந்துள்ளனர்.

ஜெர்மனியில் பெர்லினில் 14 ஆயிரத்து 735 பேரும், வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா பகுதியில் 41 ஆயிரத்து 841 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை அங்கு கொரோனாவால் மொத்தம் 92 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 17 ஆயிரத்து 314 பேர் இறந்தும் உள்ளனர். அங்கு புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளாவோரில் 63.2 சதவீதம் ஒமைக்ரான் பங்களிப்பு செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

Next Story