உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் ரஷிய சரக்கு கப்பலை பறிமுதல் செய்த பிரான்ஸ்


உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் ரஷிய சரக்கு கப்பலை பறிமுதல் செய்த பிரான்ஸ்
x
தினத்தந்தி 26 Feb 2022 7:25 PM GMT (Updated: 26 Feb 2022 7:25 PM GMT)

ஆங்கில கால்வாய் வழியாக சென்று கொண்டிருந்த ரஷிய சரக்கு கப்பலை பிரான்ஸ் கடற்படை பறிமுதல் செய்தது.

பாரீஸ்,

ரஷிய நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று நூற்றுக்கணக்கான கார்களை ஏற்றிக்கொண்டு பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் ஆங்கில கால்வாய் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த இடைமறித்து நிறுத்திய பிரான்ஸ் கடற்படை கப்பலை பறிமுதல் செய்தது. 

அதன் பின்னர் அந்த கப்பலை பவுலோன்-சுர்-மெர் நகர துறைமுகத்துக்கு கொண்டு சென்றது. அதை தொடர்ந்து பிரான்சில் உள்ள ரஷிய தூதரகம் தங்கள் நாட்டு சரக்கு கப்பலை பறிமுதல் செய்தது ஏன் என்று பிரான்ஸ் அரசிடம் விளக்கம் கேட்டது. 

அதற்கு, உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு ஏற்ப அந்த நாட்டின் சரக்கு கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதாக பிரான்ஸ் அரசு விளக்கமளித்துள்ளது.

Next Story