பாகிஸ்தானில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 7 பேர் பலி


பாகிஸ்தானில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 7 பேர் பலி
x

பாகிஸ்தானில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.

இஸ்லாமாபாத்,

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் மன்சேராவில் உள்ள நெடுஞ்சாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.

மாங்லா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.


Next Story