அலாஸ்கா பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை


அலாஸ்கா பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 July 2023 7:33 AM GMT (Updated: 16 July 2023 7:42 AM GMT)

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்கா,

அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது, கடலுக்கடியில் 9.3 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.Next Story