அமெரிக்காவுக்கு ஒரு ஜோடி பாண்டா கரடிகளை அனுப்பும் சீனா


அமெரிக்காவுக்கு ஒரு ஜோடி பாண்டா கரடிகளை அனுப்பும் சீனா
x

 Photo Credit: (AP Photo/Lenny Ignelzi)

தினத்தந்தி 23 Feb 2024 1:03 AM GMT (Updated: 23 Feb 2024 3:56 AM GMT)

இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த ஒரு ஜோடி பாண்டா கரடிகளை கலிபோர்னியாவின் சான் பிராஸ்சிஸ்கோ உயிரியல் பூங்காவுக்கு சீனா அனுப்ப உள்ளது.

பீஜிங்,

தைவான் விவகாரம், ரஷியா-உக்ரைன் போர் போன்றவற்றில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா கொண்டுள்ளது. இதனால் இரு தரப்பு உறவிலும் கடும் விரிசல் ஏற்பட்டது. எனவே இரு நாடுகளின் தலைவர்களும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை குறைப்பதாக உறுதியளித்தனர்.

இந்தநிலையில் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த ஒரு ஜோடி பாண்டா கரடிகளை கலிபோர்னியாவின் சான் பிராஸ்சிஸ்கோ உயிரியல் பூங்காவுக்கு சீனா அனுப்ப உள்ளது. பாண்டா கரடிகளை அழிவில் இருந்து மீட்க கடந்த 1972-ம் ஆண்டு முதன்முதலில் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. தேசிய சரணாலயத்துக்கு சீனா ஒரு ஜோடி கரடிகளை அனுப்பியது.

அது முதல் சீனா-அமெரிக்கா நட்புறவின் அடையாளமாக இந்த பாண்டா கரடிகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த ஒரு ஜோடி பாண்டா கரடிகளை கலிபோர்னியாவின் சான் பிராஸ்சிஸ்கோ உயிரியல் பூங்காவுக்கு சீனா அனுப்ப உள்ளது.


Next Story