"ரஷியா-உக்ரைன் போர் இந்த ஆண்டு முடிவுக்கு வர வேண்டும்" - அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் விருப்பம்


ரஷியா-உக்ரைன் போர் இந்த ஆண்டு முடிவுக்கு வர வேண்டும் - அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் விருப்பம்
x

ரஷியா-உக்ரைன் போரில், 3-ம் உலகப் போரை கட்டவிழ்த்து விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச்சில் தனது மார் எலாகோ பண்ணை வீட்டில், அவரது மனைவி மெலனியா டிரம்ப்புடன் சேர்ந்து புத்தாண்டு தினத்தை கொண்டாடினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் உக்ரைன் போர் குறித்து பேசிய அவர், ரஷியா-உக்ரைன் இடையிலான போர் இந்த ஆண்டு முடிவுக்கு வர வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.

அதே சமயம் உக்ரைன் மற்றும் ரஷியா இடையே நடைபெற்று வரும் இந்த போரில், 3-ம் உலகப் போரை கட்டவிழ்த்து விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும் அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்கவும், பணவிக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த ஆண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.


Next Story