காணிக்கையின் பலன்


காணிக்கையின் பலன்
x
தினத்தந்தி 8 May 2017 8:58 AM GMT (Updated: 8 May 2017 8:58 AM GMT)

அன்னதானம்: மூதாதையர் வழிவந்த பாவங்களை நீக்கி, சந்ததிகளின் எதிர்காலத்தைச் சிறப்புறச் செய்யும்.

ன்னதானம்: மூதாதையர் வழிவந்த பாவங்களை நீக்கி, சந்ததிகளின் எதிர்காலத்தைச் சிறப்புறச் செய்யும். குடும்பத்தில் அமைதியையும், நிம்மதியையும் கொடுக்கும். வளமான முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்தும்.

எண்ணெய் தானம்:
மனக் குழப்பங்களை நீக்கும். தெளிவான எதிர்காலத்திற்கு வழிகாட்டும். பகைவர்களின் தொல்லையில் இருந்து காப்பாற்றும். இல்லத்தை தெய்வீக அம்சமாக விளங்கச் செய்யும்.

ஆடை தானம்: தெய்வங்களுக்கு அளிக்கப் படும் புடவை, வஸ்திரம் போன்றவைகளால் எண்ணியது கைகூடும். கடன் தொல்லை அகலும். குலதெய்வ அருள் கூடிவரும்.

அதிக மதிப்பெண் பெற வைக்கும் தெய்வம்

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் தான் நினைவாற்றல் நன்றாக இருக்கும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலும். மேலும் ஜாதகத்தில் ‘ஞான காரகன் கேதுவும்’, ‘வித்யாகாரகன் புதனும்’ படிப்பு ஸ்தானத்தோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் கல்வியிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்க முடியும். மறதி இல்லாத மனிதராக வாழ்ந்து மகத்தான சாதனைகளைப் படைக்க முடியும்.

சில பிள்ளைகளுக்கு மறதி அதிகமாக இருக்கும். எதைச் சொன்னாலும் அடுத்த நிமிடமே மறந்து விடுவார்கள். பெரியவர்கள் கூட ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லியபோது செய்யாமல் விட்டு விட்டால் ‘ஆஹா! மறந்து போய்விட்டது. நாளை செய்கிறேன்’ என்பார்கள். மறதி என்ற மூன்றெழுத்துக்குள்ளேதான் மதி என்ற இரண்டெழுத்தும் இருக்கிறது. மதி என்றால் சந்திரன் என்று பொருள்.

படிப்பில் அதிக மதிப்பெண் பெற, கல்வி வளம்பெற, கலைகளில் தேர்ச்சி பெற ஹயக்ரீவர் வழிபாடு உகந்தது. சரஸ்வதி படம் வைத்து சகலகலாவல்லி மாலை பாடி வழிபாடு செய்வது மிகுந்த நன்மையை வழங்கும். 

Next Story
  • chat