இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

துலாம் ராசிக்காரர்கள் பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. கடன் சுமை கூடும். பயணத்தால் பிரச்சினை உண்டு.

பஞ்சாங்கம்:

சோபகிருது ஆண்டு, தை-7 (ஞாயிற்றுக்கிழமை)

திதி: இரவு 9.22 க்கு மேல் துவாதிசி திதி

நட்சத்திரம்: ரோகிணி, பின்னிரவு 5.32க்கு மேல் மிருகசீர்ஷம்

யோகம்: சித்தயோகம்

ராகு காலம்: மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை

எமகண்டம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை, மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

திருச்சேரை சாரநாதர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் முருகன் தெப்பம். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் பவனி

ராசிபலன்

மேஷம்

பிரச்சினைகள் தீரும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமைகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சியுண்டு.

ரிஷபம்

சந்தோஷங்களை சந்திக்கும் நாள். வீட்டை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார விரோதங்கள் விலகும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு முடிவாகும்.

மிதுனம்

குழப்பங்கள் அகலும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். சொந்த பந்தங்களின் சந்திப்பால் மனநிறைவு கூடும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம்.

கடகம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

சிம்மம்

சங்கடங்களை சமாளிக்கும் நாள். தடைகள் அகல நண்பர்கள் உறுதுணை புரிவர். திட்டமிட்ட சில வேலைகளை மாற்றியமைக்க நேரிடலாம். விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டு.

கன்னி

அலுவலக பிரச்சினைகள் அகலும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

துலாம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உறவினர் பகை உருவாகும். துலாம் ராசிக்காரர்கள் பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. கடன் சுமை கூடும். பயணத்தால் பிரச்சினை உண்டு.

விருச்சிகம்

எண்ணங்கள் எளிதில் நிறை வேறும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.

தனுசு

பணவரவு திருப்தி தரும் நாள். பணியாளர் தொல்லை அகலும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர் கள்.ஆபணரங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் மேலிடத்து ஆதரவு கிடைக்கும்.

மகரம்

நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி கள் உங்களை மதித்து பேசுவர்.

கும்பம்

உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். கடன் சுமைகளை குறைக்க எடுத்த புது முயற்சி வெற்றி தரும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

மீனம்

எதிரிகள் விலகும் நாள். உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவது கண்டு பெருமையடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.


Next Story