இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 23 Jan 2024 1:24 AM GMT (Updated: 23 Jan 2024 1:35 AM GMT)

மதுரை மீனாட்சி-சொக்கநாதர் தங்கப்பல்லக்கில் பவனி.

பஞ்சாங்கம்:

சோபகிருது ஆண்டு, தை-9 (செவ்வாய்க்கிழமை)

திதி: இரவு 9.22 க்கு மேல் சதுர்த்தசி திதி

நட்சத்திரம்: திருவாதிரை

யோகம்: மரணயோகம்

ராகு காலம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

மதுரை மீனாட்சி-சொக்கநாதர் தங்கப்பல்லக்கில் பவனி. பழனி முருகன் மயில் வாகனத்தில் புறப்பாடு. திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாணம்.

ராசிபலன்

மேஷம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தொழில் வளர்ச்சி கூடும்.

ரிஷபம்

இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மக்கட்செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை உயரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்

வழக்குகள் சாதகமாக முடியும் நாள். வாய்ப்புகள் வந்து அலை மோதும், உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்படுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். செய்தொழிலில் லாபம் உண்டு.

கடகம்

எதிர்கால நலனில் அக்கறை காட்டும் நாள், எண்ணங்கள் அனைத் தும் நிறைவேறும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும்.

சிம்மம்

புதிய பாதை புலப்படும் நாள். பொது காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பிரியமான நண்பர்களுக்கு கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

கன்னி

முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

துலாம்

வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு, பொருளாதாரநிலை உ ரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

விருச்சிகம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அருகில் உள் ளவர்களின் அனுசரிப்பு குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

தனுசு

விடியும்பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். நூதன பொருள் சேர்க்கை உண்டு. வீடு, மனை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் இணைவர். கல்யாண முயற்சி கைகூடும்.

மகரம்

தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும் நாள். தூர தேசத்திலிருந்து வரும் தகவல் அனுகூலம் தருவதாக அமையும். பண வரவு உண்டு. பெரியவர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

கும்பம்

மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள், தொழிலில் வளர்ச்சியுண்டு.

மீனம்

போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். பயணத்தால் பலன் கிடைக்கும். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.


Next Story