கட்டுமான பணிகளில் மணல் என்ற நுண் ஜல்லியின் முக்கியத்துவம்


கட்டுமான    பணிகளில்    மணல்    என்ற    நுண் ஜல்லியின்    முக்கியத்துவம்
x
தினத்தந்தி 12 April 2019 10:30 PM GMT (Updated: 12 April 2019 11:49 AM GMT)

வலிமையான கான்கிரீட் மற்றும் சுவர் மேற்பூச்சுக் கலவைக்கு, சிமெண்டு உடன் சேர்க்கப்படும் இதர மூலப்பொருட்கள் தகுந்த தரம் கொண்டவையாக இருப்பது அவசியம்.

லிமையான கான்கிரீட் மற்றும் சுவர் மேற்பூச்சுக் கலவைக்கு, சிமெண்டு உடன் சேர்க்கப்படும் இதர மூலப்பொருட்கள் தகுந்த தரம் கொண்டவையாக இருப்பது அவசியம். எனவே, கான்கிரீட் மற்றும் மேற்பூச்சுக் கலவையில் (Plastering Mortar
) பிரதான முலப்பொருளாக உள்ள மணல் என்ற நுண் ஜல்லியை பயன்படுத்துவதில் கவனமாக செயல்பட வேண்டும் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எம்–சாண்ட் பயன்பாடு 

இந்திய தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards IS : 383 -1970
) 4.75 மில்லி மீட்டர் அளவிற்கும் கீழ் உள்ளவற்றை நுண் ஜல்லி என்று விளக்கியுள்ளது. பொதுவாக நுண் ஜல்லி (Fine Aggregate) என்ற நிலையில் தமிழகம் முழுவதும் ஆற்று மணல்தான் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பாறைகளை எந்திரத்தில் பொடியாக்கி தயாரிக்கப்படும் எம்–சான்ட் (
Manufactured Sand
) பயன்பாட்டில் இருந்து வருகிறது.

நான்கு பிரிவுகள்

மணலில் உள்ள நுண் தன்மையை பொறுத்து நான்கு வகை பிரிவுகளாக (Grading Zone 1,2,3,4) தரம் பிரிக்கப்படுகிறது. பிரிவு–1 என்பது சற்று சொரசொரப்பாகவும், பிரிவு–4 என்பது அதிகபட்ச மிருதுவாகவும் இருக்கும். இவ்வகை பிரிவு–4 அளவுள்ள நுண் ஜல்லி கான்கிரீட் அமைப்புகளில் பயன்படுத்த பரிந்துரை செய்யப்படுவதில்லை.

வண்டல் மண் சோதனை

குறிப்பாக, மணலில் தூசு, களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவை அதிக அளவில் கலந்திருந்தால், அது கான்கிரீட் மற்றும் சுவர் மேற்பூச்சு கலவையின் வலிமையை குறைப்பதாக அமைந்து விடும். அதனால், வண்டல் மண் உள்ளடக்க சோதனை (
Silt Content Test
) மூலமாக அவற்றின் அளவுகளை கண்டறிந்து பயன்படுத்துவது அவசியம். தூசு மற்றும் வண்டல் மண் போன்றவை அதிகமாக மணலில் கலந்திருந்தால், தண்ணீர் கொண்டு மணலை சுத்தம் செய்து பயன்படுத்துவதே நல்லது.

ரசாயன தன்மை சோதனை

சிமெண்டு கலவையின் வலிமையை குறைக்கும் தன்மை கொண்ட மைக்கா துகள்கள் மற்றும் தாவர மாசுகள் ஆகியவற்றின் அளவுகளும் சோதித்து அறியப்பட வேண்டும். மணலில் கலந்துள்ள குளோரைடு, இரும்புக் கம்பியை அரிக்கும் தன்மை கொண்டதாக இருப்பதால் மணலின் குளோரைடு அளவு பற்றி சோதனை செய்யப்படுவது நல்லது. 

கூடுதல் சோதனைகள்

கான்கிரீட் அமைப்புகளை முறையாக கட்டமைக்க, மணலின் நீர் உறிஞ்சும் தன்மை,  ஈரத்தின் அளவு, சல்லடை பகுப்பாய்வு, அடர்த்தி, ஒப்படர்த்தி ஆகியவற்றை சோதனை செய்து அறிய வேண்டும். மேற்கண்ட சோதனைகளின் அடிப்படையில் தரம் உறுதி செய்யப்பட்ட மணலை சரியான விகிதத்தில் பயன்படுத்தினால், கான்கிரீட் மற்றும் சுவர் மேற்பூச்சு கலவை ஆகியவை உறுதியாகவும், நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதாகவும் அமையும்.

சோதனைச் சாலைகள்

அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் ஆய்வகங்கள், பொதுப்பணித் துறையின் மண் தன்மை ஆராய்ச்சி துறை மற்றும் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளின் சோதனைச் சாலைகளிலும் செயற்கை மணலை பரிசோதனை செய்யலாம். சென்னை தரமணி தேசிய தரப்பரிசோதனை ஆய்வகம், கிண்டி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஆய்வகம், பெருங்குடி ஐகொமெட் ஆய்வகம் ஆகிய இடங்களில் செயற்கை மணல் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.

Next Story