வெயில் காலத்தில் ஏற்படும் கான்கிரீட் விரிசல்கள்


வெயில் காலத்தில் ஏற்படும் கான்கிரீட் விரிசல்கள்
x
தினத்தந்தி 15 Jun 2019 2:45 AM IST (Updated: 14 Jun 2019 5:17 PM IST)
t-max-icont-min-icon

வெயில் காலங்களில் அமைக்கப்பட்ட புதிய கான்கிரீட் கட்டமைப்புகளின் வெளிப்புறத்தில் உள்ள ஈரப்பதம் விரைவாக உலர்ந்து விடும்.

வெயில் காலங்களில் அமைக்கப்பட்ட புதிய கான்கிரீட் கட்டமைப்புகளின் வெளிப்புறத்தில் உள்ள ஈரப்பதம் விரைவாக உலர்ந்து விடும். அந்த நிலையில் ஏற்படும் ஈரப்பத இழப்பை உள்ளிருந்து வெளிவரும் தண்ணீர் (bleed water) ஈடுசெய்கிறது. அவ்வாறு தண்ணீர் வெளியாகும் வேகத்தை விட, ஆவியாதல் விரைவாக நடந்தால் கான்கிரீட்டின் மேற்புறம் எளிதாக உலர்ந்து, சுருக்கங்கள் உருவாகி விடும். அதே சமயம், கட்டமைப்பின் உட்புறம் ஈரப்பதமாக இருப்பதால் அங்கு சுருக்கம் ஏற்படுவதில்லை. அதனால், கான்கிரீட்டின் மேற்புறத்தில் இழுவை தன்மை ஏற்பட்டு சுருக்க விரிசல்கள் (Shrinkage Cracks) ஏற்படுகின்றன.

Next Story