உங்கள் முகவரி

பத்திரத்தில் உள்ள மனையின் அளவுகள் + "||" + The sizes of the bond in the bond

பத்திரத்தில் உள்ள மனையின் அளவுகள்

பத்திரத்தில் உள்ள மனையின் அளவுகள்
வீடு, மனை ஆகியவற்றிற்கான பட்டாவில் உள்ள இடத்திற்கான அளவும், அதற்கான பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவும் சில சந்தர்ப்பங்களில் வித்தியாசமாக அமையலாம்.
வீடு, மனை ஆகியவற்றிற்கான பட்டாவில் உள்ள இடத்திற்கான அளவும், அதற்கான பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவும் சில சந்தர்ப்பங்களில் வித்தியாசமாக அமையலாம். காரணம், பத்திரம் பதியும்போது இடத்தை அளந்து வரக்கூடிய அளவுப்படி எழுதி கொடுப்பது வழக்கத்தில் உள்ளது. அந்த நிலையில், சம்பந்தப்பட்ட சொத்துக்கான பட்டாவில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கும், பத்திரத்தில் உள்ள அளவுக்கும் சிறிய வித்தியாசம் இருந்தால் அதை பொருட் படுத்த வேண்டியதில்லை. பெரிய அளவில் இருக்கும் பட்சத்தில் பிழை திருத்தப் பத்திரம் மூலம் பத்திரப்பதிவு முடிந்த ஒரு வருட காலத்திற்குள் செய்து கொள்ளவேண்டும்.