பூமி பூஜைக்கு உரிய நாட்களை தேர்வு செய்யும் விதம்


பூமி பூஜைக்கு உரிய நாட்களை தேர்வு செய்யும் விதம்
x
தினத்தந்தி 5 Oct 2019 4:30 AM IST (Updated: 4 Oct 2019 9:10 PM IST)
t-max-icont-min-icon

வீடுகள் உள்ளிட்ட இதர கட்டிட அமைப்புகளுக்கான பூமி பூஜை செய்து கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கு, பொருத்தமான நாள், நட்சத்திரம் போன்ற வி‌ஷயங்களை பலரும் தேர்வு செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.

நான்கு திசைகளிலும், எந்த ஒரு திசையிலும் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அமைக்கப்படலாம். அதற்கேற்ப, வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அதன் அடிப்படையில் திதி என்ற நாள் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டிய ஜோதிட ரீதியான குறிப்புக்களை இங்கே காணலாம்.    

* வடக்கு முகமாக தலைவாசல் அமைய உள்ள வீடுகளுக்கான மனை கோலும் பணிகளை தேய்பிறை நவமி முதல் சதுர்த்தசி முடிய உள்ள நாட்களில் தொடங்குவது கூடாது. 

* கிழக்கு பக்கமாக தலைவாசல் அமைக்கப்படும் வீடுகளுக்கான மனை கோலும் பணிகளை வளர்பிறை நவமி முதல் சதுர்த்தசி முடிய உள்ள நாட்களில் தொடங்கக் கூடாது.

* தெற்கு முகமாக தலைவாசல் அமைக்கப்படும் வீடுகளுக்கான மனை கோலும் பணிகளை பவுர்ணமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை உள்ள நாட்களில் தொடங்கக் கூடாது.

* மேற்கு பக்கம் தலைவாசல் அமைய உள்ள வீடுகளுக்கான மனை கோலும் பணிகளை அமாவாசை முதல் வளர்பிறை அஷ்டமி வரை உள்ள நாட்களில் தொடங்கி செய்வது கூடாது.

Next Story