சுவர்களை சுத்தம் செய்யும் அட்டை வடிவ ‘ரோபோ’
கட்டிடங்களின் சுவர்களை சுத்தம் செய்ய ‘குட்டி ரோபோ’ உருவாக்கப்பட்டுள்ளது.
கட்டிடங்களின் சுவர்கள் மற்றும் மேற்கூரை ஆகியவற்றை சுத்தம் செய்யும் வகையில் ஒரு ‘குட்டி ரோபோ’ இங்கிலாந்து பிரிஸ்டல் பல்கலைக்கழக ரோபோட்டிக்ஸ் துறையின் ஆராய்ச்சி குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ‘ரோபோ’ சுவர்களில் ஒட்டிக்கொண்டு, ஊர்ந்து செல்லும் நத்தை போன்று செயல்பட்டு சுவர் பரப்புகளை சுத்தம் செய்யும் என்று அவர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆச்சரியமான வடிமைப்பிலும், சட்டையில் உள்ள பாக்கெட்டில் வைக்கும் அளவில், நெகிழ்தன்மையும் கொண்ட இந்த ரோபோ Electro Skin என அழைக்கப்படுகிறது. இலகுவான தன்மை கொண்ட இந்த வடிவமைப்பு அடுத்த தலைமுறைக்கான ‘ரோபோ’ என்று வல்லுனர்களால் குறிப்பிடப்படுகிறது. அவற்றின் நெகிழும் தன்மை காரணமாக தேவைப்படும் வகையில் வளைத்தும் பயன்படுத்த முடியும். சுவர்களின் மேற்பரப்புக்களில் ஒட்டவைத்து விட்டால், அளிக்கப்படும் கட்டளைகளுக்கேற்ப அவை இலகுவாக நகர்ந்து செல்லும் தன்மை கொண்டது.
இதில் உள்ள மின் துண்டுதலுக்கேற்ப இயங்கும் செயற்கை தசை அமைப்பானது நத்தை மற்றும் அட்டை போன்ற உயிர்களின் உடலில் உள்ள ஒட்டும் தன்மை போன்று சுவர் பரப்புகளில் ஒட்டிக்கொள்வதுடன், நகரவும் செய்யும் என்றும் ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர். கட்டிடங்களின் குறுகலான பகுதிகள், ஆட்கள் நுழையக்கடினமான உடைந்த கட்டிடங்கள் ஆகியவற்றில் எளிதாக நுழைந்து பணிகளை செய்யக்கூடிய தன்மையை Electro Skin ரோபோ கொண்டுள்ளது. ஆராய்ச்சி நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு சென்ற நிலையில், கூடிய விரைவில் கட்டுமான துறைக்கு இந்த ‘ரோபோ’ அறிமுகம் ஆகலாம்.
Related Tags :
Next Story