கான்டெக் (Contech) தொழில்நுட்பத்தின் புதிய யுக்திகள்
எல்லாம் தானியங்கி மயமாகிக் கொண்டிருக்கும் உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் எதோ ஒரு வகையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் உள்ளது. கட்டுமானத் துறை விதிவிலக்கல்ல. இந்திய கட்டுமானத் துறையில், கட்டுமான தொழில்நுட்பம் அல்லது கான்டெக் (Contech) தொழில்நுட்பத்தின் புதிய யுக்திகளை பற்றி நாம் பார்ப்போம்.
கான்டெக் (Contech)
கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் எல்லாப் புதுமைகளை {(ட்ரோன் தொழில்நுட்பம் (drone technology), தானியங்கி கட்டுமானம் (automated construction), செயற்கை படமிடல் (artificial mapping)} போன்றவற்றை கான்டெக் என்று அழைப்பார்கள். இந்த தொழில்நுட்பங்கள் மிக சிக்கலான கட்டிட அமைப்புக்களை கட்டுவதற்கு உதவுகின்றன. மேலும் கட்டிடம் கட்டுவதற்கான கால அளவையும், உயிர் சேதத்தையும், கரியமில வாயு வெளியிடுதல் (carbon footprint) வெகுவாக குறைக்கின்றன.
கட்டிட தகவல் படிமம் (Building Information Modelling BIM) மெய்நிகர் உண்மை நிலை (Virtual Reality), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற இந்த புதிய உத்திகள் பல முன்னனி கட்டிட அமைப்பாளர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. காரணம், இந்த மறை தரத்தை குறைக்காமல் செலவை குறைக்கிறது மற்றும் பொருட்களின் விரயத்தை குறைக்கிறது கட்டிட தகவல் படிமம் (Building Information Modelling BIM)
கட்டிட தகவல் படிமம் இந்தியாவில் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் கட்டிடத்தின் முப்பரிமாண கோணத்தை கணினியில் வடிவமைக்கக் கூடியது. கட்டிடம் கட்டி முடித்தப் பின் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே காட்டும். இதன் மூலம் கட்டிடம் கட்டுபவர்கள் கட்டுமானதிற்கு ஆகும் செலவு மற்றும் கால அளவை முக்கூட்டியே திட்டமிட உதவுகிறது. இந்த முறை பல நாடுகளில் பின்பற்றப் படுகிறது. இந்தியாவில் பெருநகரங்களில் எங்கெல்லாம் விரிவான திட்டமிடல் தேவைப் படுகிறதோ அங்கெல்லாம் பயன்படுத்தப் படுகிறது.
மெய்நிகர் உண்மை நிலை(Virtual Reality)
மெய்நிகர் உண்மை நிலை என்பது இல்லாத ஒன்றை இருப்பதாகக் கருதுவது. இன்னும் எழுப்பப் படாத கட்டிடத்தை, கட்டி முடிக்கப் பட்டதாக நினைத்து, அதன் பாவீனம், அது நீண்ட காலம் நிலைத்திருக்க தேவைப்படும் வலிமை இவற்றை கவனமாக திட்டமிடுவது மெய்நிகர் உண்மை நிலை முறை ஆகும். "ஒரு கட்டிடம் கட்டுவதற்கு முன் அதன் முழு கட்டுமானத்தையும் பார்க்க நேர்ந்தால், எவ்வளவு சிக்கலான கட்டுமானமாக இருந்தாலும் கட்டி முடிக்கலாம் " என்ற கோட்பாட்டில் இந்த முறை இயங்குகிறது. இது கட்டிட வடிவமைப்பாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது; கட்டுமான செலவுகளையும், பொருட்கள் விரயத்தையும் வெகுவாக குறைக்கிறது.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட அறிவாற்றல் கொண்ட கருவி.தானியங்கி கட்டுமானம் முதல் சுய விமானி ட்ரான்(Drone ) வரை எல்லாம் இந்த வகையை சார்ந்தவை. தேவையான தரவுகளை (data) இந்த செயற்கை நுண்ணறிவுக்கு (AI) அளித்தால் செங்கல் முதல் வலுவான கான்கிரிட்க்கு தேவைப்பாடு சிமெண்ட் கலவை வரை, நிபுணர்களை விட வேகமாக கணித்துச் சொல்லும் ஆற்றல் கொண்டது.
இந்த செயற்கை நுண்ணறிவு (AI) முறை ஸ்மார்ட் சிட்டி (smart city) உருவாக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம், தானாக சரி செய்யும் முறை, வேகமாக ஏதிர் வினையாற்றும் கால அளவு, இவை யாவும் செயற்கை நுண்ணறிவு (AI) வசம் இருந்தால், ஒரு தவற்றை மனிதன் கண்டுபிடிப்பதுற்கு முன்பே அது சரி செய்யப்படும். செயற்கை நுண்ணறிவு (AI) என்பது மனிதர்களை கட்டுப்பத்துவது அல்ல அவர்களின் குறைபாடுகளை குறைக்க உதவுகிறது. நம் குறுகிய எண்ணங்கள், தொலைநோக்கு பார்வை இவற்றை மேம்படுத்துவதே செயற்கை நுண்ணறிவின் (AI) பயனாகும். இந்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை காக்க மற்றும் கலைநயம் மிக்க கட்டுமானங்களை உருவாக்க பெரிதும் உதவுகிறது.