கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு? இன்று பலப்பரீட்சை + "||" + IPL Cricket: Will the Bengalore team respond to mumbai team? Today is a test

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு? இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு? இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 7 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி (பெங்களூரு, சென்னைக்கு எதிராக), 5 தோல்வி கண்டுள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி (பஞ்சாப், டெல்லி அணிக்கு எதிராக), 5 தோல்வி அடைந்து பின் தங்கி இருக்கிறது.

மும்பை அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, இவின் லீவிஸ், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். பந்து வீச்சில் மெக்லெனஹான், குணால் பாண்ட்யா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். வலுவான சென்னை அணியை வீழ்த்திய நம்பிக்கையுடன் மும்பை அணி களம் காணும்.

பெங்களூரு அணி தனது முந்தைய 2 லீக் ஆட்டங்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமும், 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடியில் பெங்களூரு அணி இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி அரை சதம் அடித்தாலும் அது அணிக்கு பலன் அளிக்கவில்லை. அந்த அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் மோசமாக இருந்தது. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் பெங்களூரு அணி உள்ளது. காய்ச்சல் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத டிவில்லியர்ஸ் இந்த ஆட்டத்தில் களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை-பெங்களூரு அணிகள் இடையே மும்பையில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பெங்களூரு அணி முயற்சிக்கும். இரு அணிகளுக்கும் இன்னும் 7 ஆட்டங்கள் எஞ்சி இருக்கிறது. அதில் 6 ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இந்த இரு அணிகளும் 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை அணி 14 முறையும், பெங்களூரு அணி 8 தடவையும் வென்று இருக்கின்றன. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.