அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 147 ரன்கள் இலக்கு


அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 147 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 17 March 2019 10:17 PM GMT (Updated: 17 March 2019 10:17 PM GMT)

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டேராடூன்,

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டேராடூனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் அயர்லாந்து 172 ரன்களும், ஆப்கானிஸ்தான் 314 ரன்களும் எடுத்தன. 142 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 22 ரன் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 2-வது இன்னிங்சில் 93 ஓவர்களில் 288 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. ஆன்டி பால்பிர்னி (82 ரன்), கெவின் ஓ பிரையன் (56 ரன்) அரைசதம் விளாசினர். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

Next Story