டோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி


டோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 19 April 2019 7:49 AM GMT (Updated: 19 April 2019 7:49 AM GMT)

டோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மும்பை,

டோனிக்கும் தனக்கும் இடையே நம்பிக்கை மற்றும் மதிப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி கூறியதாவது:- “ ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்து 300 பந்துகள் வரை புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர் டோனி. டோனியை பலர் விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது. 

நான் இந்திய அணியில் இடம் பிடித்த போது, ஒரு சில போட்டிகளில் மிகவும் மோசமாக செயல்பட்டேன். அந்த தருணத்தில் டோனி எனக்கு பதில் வேறு எதாவது ஒரு வீரருக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம் ஆனால், அவர் அதை செய்யாமல் என் மேல் நம்பிக்கை வைத்திருந்தார். 

அதைத்தொடர்ந்து, எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை நான் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டேன். இளம் வீரருக்கு மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைக்காது. அந்த வாய்ப்பையும் டோனி எனக்கு தந்ததால் அவரை என்றும் மறக்க மாட்டேன். அவருக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன்" என தெரிவித்தார்.

Next Story