கிரிக்கெட்

3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணியை வீழ்த்தி வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + 3 nations Cricket: West Indies defeated Qualifying for the Bangladesh Final

3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணியை வீழ்த்தி வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு தகுதி

3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணியை வீழ்த்தி வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு தகுதி
3 நாடுகள் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டப்லின்,

வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அயர்லாந்தில் நடந்து வருகிறது. இதில் டப்லினில் நேற்று முன்தினம் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் மோதின.


‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் 87 ரன்னும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 62 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள். வங்காளதேச அணி தரப்பில் முஸ்தாபிஜூர் ரகுமான் 4 விக்கெட்டும், மோர்தசா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி 47.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 63 ரன்னும், சவும்யா சர்கார் 54 ரன்னும், முகமது மிதுன் 43 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மக்முதுல்லா 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் ஆஷ்லே நர்ஸ் 3 விக்கெட் சாய்த்தார். வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த போட்டி தொடரில் வங்காளதேச அணி, வெஸ்ட்இண்டீசை வீழ்த்துவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை சாய்த்து இருந்தது.

இன்று நடைபெறும் 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்து-வங்காளதேச அணிகள் சந்திக்கின்றன.

இறுதிப்போட்டி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் வெஸ்ட்இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. டோனிக்கு வெஸ்ட்இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டோனிக்கு, வெஸ்ட்இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2. 3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வங்காளதேச அணி ‘சாம்பியன்’
3 நாடுகள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
3. 3 நாடுகள் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி
3 நாடுகள் கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.