ஒரே நாளில் பிறந்த நாள்: பும்ரா, ஜடேஜா, ஸ்ரேயாஸ், கருணுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்த்து


ஒரே நாளில் பிறந்த நாள்: பும்ரா, ஜடேஜா, ஸ்ரேயாஸ், கருணுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்த்து
x
தினத்தந்தி 6 Dec 2019 11:58 PM GMT (Updated: 6 Dec 2019 11:58 PM GMT)

ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடிய, பும்ரா, ஜடேஜா, ஸ்ரேயாஸ், கருணுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்த்து தெரிவித்தது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு நேற்று 26-வது வயது பிறந்தது. இதேபோல் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யருக்கும் நேற்று பிறந்த நாளாகும். இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க போராடி வரும் டெஸ்டில் முச்சதம் கண்ட பேட்ஸ்மேன் கருண்நாயருக்கும் நேற்று பிறந்த நாளாகும். பிறந்த நாளையொட்டி இந்த 4 வீரர்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது. அத்துடன் இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

Next Story