ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி
x
தினத்தந்தி 7 March 2020 11:47 PM GMT (Updated: 7 March 2020 11:47 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றிபெற்றது.

போட்செப்ட்ஸ்ரூம்,

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போட்செப்ட்ஸ்ரூமில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது. தனது முதலாவது சதத்தை அடித்த மார்னஸ் லபுஸ்சேன் 108 ரன்களில் (108 பந்து, 8 பவுண்டரி) போல்டு ஆனார். அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 45.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்முட்ஸ் (84 ரன்), கைல் வெர்ரினி (50 ரன்), ஹென்ரிச் கிளாசென் (68 ரன்) அரைசதம் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு உடனடியாக புறப்படுகிறது. நாளை டெல்லிக்கு வந்தடையும் தென்ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெனிமான் மலான் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.

Next Story