மும்பை டெஸ்ட் - மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி அபார ஆட்டம்!


மும்பை டெஸ்ட் - மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி அபார ஆட்டம்!
x
தினத்தந்தி 5 Dec 2021 6:23 AM GMT (Updated: 5 Dec 2021 6:23 AM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 405 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து விளையாடி வருகிறது.

மும்பை,

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் சதமடித்து அசத்தினார்.

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதனை தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய தொடங்கியது. இன்று நடைபெற்று வரும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் மயங்க் அகர்வால் 62 ரன்களுக்கும் புஜாரா 47 ரன்களுக்கும்  ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் 17 ரன்களுடனும் கேப்டன் கோலி 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

மூன்றாம் நாள் உணவு இடைவேளை முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலாம், இந்தியா 405 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து விளையாடி வருகிறது.

நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Next Story