டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு


டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 8 Dec 2021 8:20 PM GMT (Updated: 8 Dec 2021 8:20 PM GMT)

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. 

இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், மும்பை டெஸ்டில் ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் (150, 62 ரன்கள்) 30 இடங்கள் எகிறி 11-வது இடத்தை பிடித்துள்ளார். 

பந்து வீச்சாளர் தரவரிசையில், மும்பை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த நியூசிலாந்து இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 23 இடங்கள் உயர்ந்து 38-வது இடத்தை பிடித்து இருக்கிறார். 

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில், மும்பை டெஸ்டில் 8 விக்கெட் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

Next Story