கிரிக்கெட்

மைதானத்தில் நெஞ்சு வலியால் துடித்த கிரிக்கெட் வீரர்.. மருத்துவமனையில் அனுமதி! + "||" + Pakistan Test batter Abid Ali rushed to hospital with chest pain

மைதானத்தில் நெஞ்சு வலியால் துடித்த கிரிக்கெட் வீரர்.. மருத்துவமனையில் அனுமதி!

மைதானத்தில் நெஞ்சு வலியால் துடித்த கிரிக்கெட் வீரர்.. மருத்துவமனையில் அனுமதி!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அபித் அலி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அபித் அலி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த வலது கை பேட்ஸ்மேன் ஆன அபித் அலி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உள்பட 1180 ரன்கள் எடுத்துள்ளார். 

இந்த நிலையில், 34 வயதான அபித் அலி  குயாய்ட்-இ-ஆசாம் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானின் மத்திய பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்துள்ளார் .இன்று நடைபெற்ற போட்டியின் போது அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பாதியிலேயே களத்திலிருந்து வெளியேறினார்.

பின் அவர் மருத்துவமனைக்கு சென்று முறையான பரிசோதனைகள் மேற்கொண்டார். பரிசோதனை முடிந்து தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் முதல் தர கிரிக்கெட் தொடர்களில் 9000 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

தொடர்புடைய செய்திகள்

1. 1971ம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச போர் இனப்படுகொலையை நியாயப்படுத்த பாகிஸ்தான் முயற்சிப்பதாக தகவல்!
வங்கதேச போரின் போது, வங்கதேச மக்களை படுகொலை செய்ததை பாகிஸ்தான் நியாயப்படுத்த முயல்கிறது என்று குளோபல் ஸ்ட்ராட் வியூ என்ற ஊடகக் குழு செய்தி வெளியிட்டுள்ளது.
2. லாகூர் டெஸ்ட் : கடைசி நாளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 278 ரன்கள் தேவை
ஆஸ்திரேலிய அணி ,பாகிஸ்தானுக்கு 351 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது
3. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் : வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி
123 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்க்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது
4. ஒரு மாணவன் கூட இல்லாமல் செயல்படும் 276 பள்ளிக்கூடங்கள்.. எங்கு தெரியுமா? - அதிர்ச்சி தகவல்!
276 பள்ளிக்கூடங்களில் 317 ஆசியர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் ஒரு மாணவன் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
5. “நான் தெருவில் இறங்கி நடந்தால்...” எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல் விடுத்த இம்ரான்கான்!
எதிர்க்கட்சிகள் அரசை கவிழ்க்க முற்பட்டால் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என்று இம்ரான்கான் பேசியுள்ளார்.