ஜூனியர் உலக கோப்பை: அரைஇறுதியில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்


ஜூனியர் உலக கோப்பை: அரைஇறுதியில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 1 Feb 2022 12:11 AM GMT (Updated: 1 Feb 2022 12:11 AM GMT)

ஜூனியர் உலக கோப்பை அரைஇறுதியில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

ஆன்டிகுவா,

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 
முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி தனது 3 லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்ததுடன், கால்இறுதியில் தென்ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது. 

ஆப்கானிஸ்தான் அணி லீக் ஆட்டங்களில் 2 வெற்றி, ஒரு தோல்வி (பாகிஸ்தானிடம்) கண்டது. கால்இறுதியில் 4 ரன் வித்தியாசத்தில் இலங்கைக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. 135 ரன் இலக்கை நோக்கி ஆடிய இலங்கையை, 46 ஓவர்களில் 130 ரன்களுக்குள் ஆப்கானிஸ்தான் அணி சுருட்டி அசத்தியது. 

இதனால் இன்றைய ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணிக்கு கடும் குடைச்சல் கொடுப்பதுடன் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற முயற்சிப்பார்கள். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

Next Story