தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: வங்காளதேச அணி வெற்றி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 March 2022 9:07 PM GMT (Updated: 18 March 2022 9:07 PM GMT)

வங்காளதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

செஞ்சூரியன்,

வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவில்  சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .

இரு அணிகளும் மோதும் முதல் ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது .

அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது ,50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 77 ரன்கள் குவித்தார் .

இதனை தொடர்ந்து 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 48.5 ஓவர்களில் 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக வான் டர் துசன் 86 ரன்களும், டேவிட் மில்லர் 79 ரன்களும் குவித்தனர். இருவரும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல முயன்றும், அது கடைசியில் பலன் அளிக்கவில்லை. 

இறுதியில் வங்காளதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நாளை இரண்டாவது ஒருநாள் போட்டியானது நடைபெற உள்ளது.


Next Story