ஐ.பி.எல். வரலாற்றில் கே.எல். ராகுலின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த கெய்க்வாட்


ஐ.பி.எல். வரலாற்றில் கே.எல். ராகுலின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த கெய்க்வாட்
x

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் துபே 66 ரன்களும், கடைசி ஓவரில் களமிறங்கிய எம்.எஸ். தோனி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட 20 ரன்களும் குவித்து அசத்தினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆட்டத்தில் அடித்த ரன்களையும் சேர்த்து இதுவரை ஐ.பி.எல். தொடரில் அவர் 57 இன்னிங்சில் 2021 ரன்கள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற கே.எல் ராகுல் சாதனையை உடைத்துள்ள ருதுராஜ் புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல் :

1. ருதுராஜ் கெய்க்வாட் : 57 இன்னிங்ஸ்

2. கேஎல் ராகுல் : 60 இன்னிங்ஸ்

3. சச்சின் டெண்டுல்கர் : 63 இன்னிங்ஸ்

4. ரிஷப் பண்ட் : 64 இன்னிங்ஸ்

5. கௌதம் கம்பீர் : 68 இன்னிங்ஸ்

மேலும் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் கிறிஸ் கெயில், ஷான் மார்ஷ்க்கு அடுத்து 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.


Next Story