இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம்; 'தவறாக நடந்து கொள்ளாதீர்கள்'...இந்திய ரசிகர்களுக்கு கவுதம் கம்பீர் வேண்டுகோள்...!


இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம்; தவறாக நடந்து கொள்ளாதீர்கள்...இந்திய ரசிகர்களுக்கு கவுதம் கம்பீர் வேண்டுகோள்...!
x

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெற்று வரும் வேளையில் இந்திய ரசிகர்களுக்கு கவுதம் கம்பீர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

ஆமதாபாத்,

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் மற்றும் அப்துல்லா ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் அப்துல்லா 20 ரன்னிலும், இமாம் 36 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து பாபர் - ரிஸ்வான் இணை ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டு வருகின்றனர். இந்த ஆட்டமானது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியை ஆதரித்து ஏராளமான இந்திய ரசிகர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய ரசிகர்களுக்கு இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, உங்கள் அணியை ஆதரிக்கவும். ஆனால் இங்கு விளையாட வந்தவர்களிடம் (பாகிஸ்தான் அணி) தவறாக நடந்து கொள்ளாதீர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் உங்கள் விருந்தினர்கள். அவர்கள் உலகக் கோப்பையை விளையாட வந்துள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story