கடைசி டி20 போட்டி : ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்


கடைசி டி20 போட்டி : ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
x

Image Tweet : ICC 

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெர்த்தில் நடைபெறுகிறது.

பெர்த்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் அந்த இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெர்த்தில் நடைபெறுகிறது.

இதில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வெல்ல ஆஸ்திரேலியா முனைப்பு காட்டும். இந்த போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்க வெஸ்ட் இண்டீஸ் அணி போராடும்.

இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.


Next Story