ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; இலங்கை அணி அறிவிப்பு


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; இலங்கை அணி அறிவிப்பு
x

image courtesy: Sri Lanka Cricket twitter

இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் வரும் 17ம் தேதி தொடங்குகிறது.

கொழும்பு,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 14ம் தேதி நடைபெறுகிறது.

இந்த போட்டி முடிந்ததும் இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு வனிந்து ஹசரங்கா கேப்டனாகவும், சரித் அசலங்கா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் ஒருநாள் தொடரின் போது காயமடைந்த துஷ்மந்தா சமீரா இடம் பெற்றிருந்தாலும் அவர் விளையாடும் அணியில் இடம் பெறமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 தொடருக்கான இலங்கை அணி விவரம்; வனிந்து ஹசரங்கா (கேப்டன்), சரித் அசலங்கா (துணை கேப்டன்), பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா, குசல் பெரேரா, அஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, சதீரா சமரவிக்ரமா, காமிந்து மெண்டிஸ், மகேஷ் தீக்சனா, அகிலா தனஞ்செயா, மதீஷா பதிரானா, தில்ஷன் மதுஷன்கா, நுவான் துஷாரா, துஷ்மந்தா சமீரா, பினுரு பெர்னாண்டோ.Next Story