பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்...இந்திய அணியின் சிறந்த பீல்டராக கே.எல்.ராகுல் தேர்வு...!


பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்...இந்திய அணியின் சிறந்த பீல்டராக கே.எல்.ராகுல் தேர்வு...!
x

Image Courtesy: AFP

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

ஆமதாபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில் முறையே ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக பீல்டிங் செய்த வீரருக்கான விருது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இமாம் உல் ஹக் கொடுத்த கேட்ச்சை ராகுல் அபாரமாக பிடித்தார். அதனால் அவர் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறந்த பீல்டர் விருது பெற்ற ஷர்துல் தாக்கூரிடம் இருந்து பதக்கம் கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஷர்துல் தாக்கூரே ராகுலுக்கு வழங்கி சிறப்பித்தார்.



Next Story