பெண்கள் பிரீமியர் லீக்: பெங்களூருவுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு


பெண்கள் பிரீமியர் லீக்: பெங்களூருவுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு
x

டபிள்யூ.பி.எல். தொடரில் பெங்களூருவுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

புதுடெல்லி,

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று முடிவடைந்தன.

இந்த தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி பெங்களூரு முதலில் பந்துவீச உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:-

குஜராத் ஜெயன்ட்ஸ்: பெத் மூனி(கேப்டன்), லாரா வால்வார்ட், போப் லிட்ச் பீல்ட், வேதா கிருஷ்ணமூர்த்தி, தயாளன் ஹேமலதா, ஆஷ்லே கார்ட்னர், கேத்ரின் பிரைஸ், தனுஜா கன்வர், மேக்னா சிங், மன்னத் காஷ்யப், ஷப்னம் எம்டி ஷகில்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: சப்பினேனி மேகனா, ஸ்மிருதி மந்தனா(கேப்டன்), எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், சோபி டெவின், சோபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஏக்தா பிஷ்ட், சிம்ரன் பகதூர், ஆஷா சோபனா, ரேணுகா தாக்கூர்


Next Story